நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய அவர், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக-பாஜக ஆகிய இரு கட்சிகளும் வரும் சட்டமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ள நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து ரஜினியுடன், அதிமுக- பாஜக கூட்டணி இணையுமா என்கிற கேள்வியை எழுப்புவதை விட, ரஜினி, பாஜகவின் மேற்பார்வையில் தான் செயல்படுகிறார் என கிளப்பப்படும் சந்தேகத்திற்கு வலு ஊட்டும் விதத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
English Summary
Opportunity for alliance with Rajini ..! - What does the OPS opinion mean ..?