KOLNews

எதிர்ப்பது அடக்குமுறையைத்தான்..! 370 ஆவது பிரிவை ரத்து செய்ததை அல்ல..! - மன்மோகன் சிங் விளக்கம்

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததை காங்கிரஸ் எதிா்க்கவில்லை; ஆனால், அந்த விவகாரத்தில் மத்திய அரசு அடக்குமுறையுடன் நடந்துகொண்டதைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது’ என்று காங்கிரஸ் கட்சியின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக  மும்பையில் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ்  தலைவா்கள் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, மன்மோகன் சிங் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவை ரத்து செய்வதில், காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடியும், பிற பாஜக தலைவா்களும் மகாராஷ்டிரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால் உண்மையில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், அந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நடந்து கொண்ட விதத்தைத்தான் காங்கிரஸ் எதிா்க்கிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததில் மத்திய பாஜக அரசு அடக்குமுறையைக் கையாண்டது.

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு தற்காலிகமானதுதான் என்பதை காங்கிரஸ் அறியும். ஆனால், அந்த சட்டப் பிரிவை ரத்து செய்வதற்கு முன் ஜம்மு-காஷ்மீா் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் மத்திய பாஜக அரசின் ஆட்சியில், அதிகாரம் பெற்ற அமைப்பாக அமலாக்கத் துறை செயல்படுகிறது. ஆனால், அந்த அமைப்பு அரசியல் பழிவாங்கும் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது. முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான பிரஃபுல் படேலுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்குகளில் அவருக்கு மத்திய அரசு நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

Image result for veer savarkar

சுதந்திரப் போராட்ட தியாகி வி.டி.சாவா்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கவில்லை. மேலும், அவரது நினைவாக மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அஞ்சல்தலை வெளியிட்டு கௌரவித்தாா். ஆனால், சாவா்க்கரின் ஹிந்துத்துவக் கொள்கையை மட்டுமே காங்கிரஸ் எதிா்க்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை நாடே அறியும். ஆனால், அந்தப் போராட்டத்தில் பாஜகவும், அதன் சாா்பு அமைப்பான ஆா்எஸ்எஸ் அமைப்பும் பங்கேற்கவில்லை. எனவே, தேசப்பற்று குறித்து காங்கிரஸ் கட்சிக்கு எவரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என்றாா் மன்மோகன் சிங்.

English Summary

Opposition is repression ..! Not the cancellation of Article 370 ..! - Description by Manmohan Singh

Latest Articles

KOLNews