KOLNews

எதிர்க்கட்சிகள், அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு உடனடி நிவாரணமாக நேரடி பண பட்டுவாடா செய்யப்படவேண்டும்  என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேரடி பண உதவி செய்வது மட்டுமே தீர்வல்ல. என எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கு பதில் அளித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அண்மையில், கொரோனா தொற்று பரவல் தாக்கத்தால் ஏற்பட்ட  பொருளாதாரம் வீழ்ச்சியை சரி செய்ய 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டங்களை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  

ஐந்து கட்டங்களாக திட்டங்களை அறிவித்த அவர், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில்,

எதிர்க்கட்சிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய அவர் ஏழைகளின் கைகளுக்கு பணத்தை நேரடியாக கொடுப்பது மட்டுமே தீர்வல்ல என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது -  மார்ச் மாதத்தில் ஊரடங்கை முதலில் அறிவித்த பின்னர், ஒரு நிவாரண தொகுப்பை அரசாங்கம் கொண்டு வந்தது. அதில் இந்த காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் உணவு தானியங்கள் வழங்குதல் மற்றும் ஒரு சில பிரிவினருக்காக நேரடியாக பணம் அளித்தல் ஆகியன இருந்தன. ஆனால் இரண்டாவது தொகுப்பு இன்னும் விரிவானதாக இருக்கும் என்றார்.

அத்துடன், ஊரக வேலைவாய்ப்பு, எளிதான வங்கிக்கடன், கொள்கை சீர்திருத்தம் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக பொருளாதார தொகுப்பு  உள்ளது என்றும்  தெரிவித்துள்ளார்.

English Summary

Opposition parties want to see political gain. - Finance Minister Nirmala Sitharaman accused

Latest Articles

KOLNews