KOLNews

பழனிசாமியே முதல்வர் வேட்பாளர்..! - பொன் ராதாகிருஷ்ணன் திடீர் பல்டி

அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 'அதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமையலாம். மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அமையலாம்;,  என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்தை கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனது கருத்தை வேறுவிதமாக தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,'தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கிறது அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் உள்ளோம். எங்கள் கூட்டணியில் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்.  அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நான் கூறிய கருத்தை திரித்து வெளியிட்டு உள்ளனர். மேலும், குமரியில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்திக்க உள்ளேன் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

 

English Summary

Palanisamy is the Chief Ministerial candidate ..! - Pon Radhakrishnan

Latest Articles

KOLNews