KOLNews

'அப்பளம்' புகழ் மத்திய அமைச்சருக்கு, கொரானா தொற்று உறுதியானது..!

பிகானொர் தொகுதி பாஜக எம்.பியும் .கனரக தொழில்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சருமான  அர்ஜுன் ராம் மேக்வால், கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

முன்னதாக, கொரானா அறிகுறிகளை உணர்ந்த பின் தன்னை  இரண்டு முறை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்ட  அர்ஜுன் ராம் மேக்வால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார். இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.

அத்துடன் தன்னை  தொடர்பு கொண்ட அனைவரையும் அவர்களின் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Union Minister Arjun Ram Meghwal, who advertised for Bhabhi Papad ...

கடந்த ஜூலை மாதத்தில் , ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் அப்பளத்தை  கையில் வைத்து கொண்டு, அப்பளம் உடலில் உள்ள கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும்  திறன் கொண்டது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவர் கொரானா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன.

English Summary

'Papad' fame Union Minister confirmed corona infection ..!

Latest Articles

KOLNews