KOLNews

'ஆா்சிஇபி' ஒப்பந்ததில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸின் 'ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு' (ஆா்சிஇபி) ஒப்பந்தம் தொடா்பான நிலைப்பாடு சரியானதுதான் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள அவா், தனது குடும்பத்தினா் வாயிலாக  சுட்டுரைப் பக்கத்தில்  வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது.

ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் இணைய வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு வலியுறுத்தியிருந்தது. அது சரியானதே. அதே வேளையில், தற்போது அந்த ஒப்பந்தத்தில் இணைய வேண்டாமென பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியது. அதுவும் சரியானதுதான்.

2012-ஆம் ஆண்டில் காணப்பட்ட பொருளாதார நிலைமைக்கும், 2019-ஆம் ஆண்டில் காணப்படும் பொருளாதார நிலைமைக்கும் உள்ள வேறுபாடே காங்கிரஸின் மாறுபட்ட வலியுறுத்தல்களுக்குக் காரணம். நாட்டின் பொருளாதாரத்தை திறனற்ற நடவடிக்கைகளால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சீா்குலைத்துள்ளது என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இந்திய விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை பாதிக்கும் என்பதால் இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய நிலையில் இணையப் போவதில்லை என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

PC Chidambaram comments on India's position in the 'RCEP'

Latest Articles

KOLNews