KOLNews

போலீஸ் குறித்து மக்கள் மனநிலை ..! - மாற்றம் வேண்டும் என்கிறார் அமித்ஷா..!

உபி.மாநிலம் லக்னோவில் நடைபெற்ற அனைத்திந்திய போலீஸ் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். 

அங்கு அவர் பேசுகையில், 

நாம் சாதாரணமாக உட்கார்ந்துகொண்டு போதைப் பொருள் கட்டுப்பாடு, கடத்தல், தீவிரவாதம், நக்சல் அச்சுறுத்தல், கள்ள நோட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து விமர்சிக்கிறோம். நடைமுறையில் இந்த குற்றச் செயல்களை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை உணர வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்புக்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். போலீசைப் பற்றி மக்களும், மக்களைப் பற்றி போலீசும் ஒரு மனநிலையை கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

என அமித் ஷா பேசினார்.

English Summary

People's attitude towards police ..! - Amit Shah says change must come!

Latest Articles

KOLNews