KOLNews

வாகன விற்பனை சரிவுக்கு மக்கள் நினைப்பு தான் காரணம்..! - நிர்மலா சீதாராமன் .!

அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி,கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாகன விற்பனை சரிவிற்கு ஒலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களில் புரிந்த சாதனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது.

Image result for vehicle sales down

அதில் பங்கேற்ற பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மூன்று மாதங்களில் மத்திய அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பேசினார். அத்ன் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு ,

"வாகன விற்பனை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி அதற்கு மாதந்தோறும் மாதத் தவணைக் கட்டுவதற்கு பதிலாக, தேவைப்படும் போது ஓலா அல்லது உபர் கால் டாக்ஸியைப் பயன்படுத்திக் கொள்வதே எளிது என்று நினைக்கலாம். இதுபோல லட்சக்கணக்கானோர் நினைப்பதால் வாகன விற்பனை சரிவடையலாம். இதுபோல பல காரணங்கள் வாகன விற்பனை சரிவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன"  என்று  நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

English Summary

People's thought is responsible for the decline in vehicle sales ..! - Nirmala Sitharaman.!

Latest Articles

KOLNews