KOLNews

தமிழில் பதிவிட்டு உதவி கோரும் பினராயி விஜயன்..! - மக்களின் முதல்வர்..!

கடந்த வருடம் வரலாறுகாணாத பெருவெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவித்தது நினைவிருக்கலாம். அப்போது தமிழகத்தில் இருந்து அரசு சார்பிலும், பொதுமக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் சென்ற உதவிகள் அம்மாநில மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே போல் தற்போது கடந்த 4 மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கி தவித்து வரும் சென்னைக்கு கேரளத்திலிருந்து ரயில் மூலம் தண்ணீர் வழங்க கேரள அரசு தானாக முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பெரியாறு போன்ற விவகாரங்களில் கேரளாவுடன் சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்தாலும், முந்தைய காலங்களில் இருந்த துவேஷ உணர்வு , தமிழக மக்கள் காட்டிய மனிதாபிமானத்தினாலும், அதை சரியாக உள்வாங்கிக்கொண்டு நட்புக்கரம் நீட்டும் பக்குவப்பட்ட முதல்வர் கேரளத்தில் அமைந்திருப்பதாலும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வருடமும் பெரும் மழை வெள்ளத்தில் கேரளா சிக்கியுள்ளது. அதையடுத்து, மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு உதவி கோரி, அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் கட்டுரையை தமிழில் பதிவிட்டு  தமிழகத்தின் உதவியை கோரியுள்ளார்.

Image result for kerala flood

மேலும், கேரளத்துக்கு உதவி தேவையில்லை என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்வதாகவும், அது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது அங்குள்ள உள்மாநில அரசியலை புலப்படுத்துகிறது.

இந்நிலையில், இது குறித்து பினராயி விஜயன் வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது...

கேரளத்தில் இந்த வருடம் மழையால், வயநாடு மாவட்டத்தின் புத்துமலை, மேப்பாடி ஆகிய பகுதிகளும், மலப்புரம் மாவட்டத்தின் பூதானம், கவளப்பாரை ஆகிய பகுதிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் முடிந்த அளவு உதவுவதற்கு கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை வரை, 91 பேர் உயிரிழந்துவிட்டனர். அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 1,243  முகாம்களில் 2,24,506 பேர் தங்கியுள்ளனர்.

இதுபோன்ற சூழலில், கேரளத்துக்கு உதவி தேவையில்லை என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். இது, எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்கள் உதவிகள் மிகவும் தேவை. சிறியதா, பெரியதா என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள் 

என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கேரளத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டதையும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மாநிலத்தில் உள்ள அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் , எவ்வித தயக்கமும் இன்றி தமிழகத்தின் உதவியை கோரும் பினராயி விஜயனின் இச்செயல், கேரள மாநில மக்களின் மீதான அவரது அக்கறையை காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

English Summary

Pinarayi Vijayan asks for help in Tamil - CM of the people ..!

Latest Articles

KOLNews