KOLNews

மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது நிறுத்திக்கொள்ளங்கள்..! - டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் சாராம்சம் - 

சென்னை உயர்நீதிமன்றம்,  பழனிசாமி அரசு, கிராம சாலைகளை மேம்படுத்துவதாகக் கூறி விதிகளுக்கு மாறாக நடைமுறைப்படுத்த நினைத்த சுமார் 2 650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை  ரத்து செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு ஊராட்சி மன்றங்களின் மூலமாக கிராம சாலைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் 

கனிம வளம், உள்ளாட்சி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் நடந்த பல குளறுபடிகளுக்கு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஏற்கனவே பழனிசாமி அரசு ஆளாகியிருக்கிறது. குறிப்பாக அரியர் தேர்வுகளில் பாஸ் ஆனதாக அறிவித்தது, வெளி மாநிலத்தவர் தமிழக அரசின் பணிகளில் அமர்த்தப்பட்டது போன்ற விஷயங்களில் தனது தவறான முடிவுகளுக்காக கடும் கண்டனத்திற்கு இந்த அரசு ஆளாகியுள்ளது.

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் ,

English Summary

Please stop acting against the people ..! - TTV Dhinakaran

Latest Articles

KOLNews