KOLNews

பி.எம். கேர்ஸ்..? - மத்திய அரசை கணக்கு கேட்கும் மம்தா பானர்ஜி..!

பிரதமர் நிதி என ஒன்று இருக்க, புதிதாக பி.எம். கேர்ஸ் என்கிற நிதியத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், அது எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் அந்த நிதியத்திற்கு  பல வகையில் நிதி சேர்ந்தே வருகிறது. 

இந்நிலையில், நிதியத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே சென்றது? என, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி.மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்வி.மம்தா பானர்ஜி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை, பா.ஜ.க.வைத்தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தத்துடன், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு என்ன உதவி செய்தது? எனக் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், பி.எம். கேர்ஸ் நிதியத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் எங்கே சென்றுவிட்டது? என கேள்வி எழுப்பினார். மேலும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்‍க மத்திய புலனாய்வு அமைப்புகளை, பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

English Summary

P.M. Course ..? - Mamata Banerjee questioning Central Government

Latest Articles

KOLNews