KOLNews

கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் கூறியது கட்சி கருத்து இல்லை”- வானதி சீனிவாசன்

நேற்று, தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாற்றுக்கட்சியினர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.  மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தனர். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், 

கோட்சேவை தேசபக்தர் என்று பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகூர் கூறியதை , கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும். தமிழக பா.ஜ.க. தலைவரை உடனடியாக அறிவித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கட்சி இல்லை. தலைவர் யார்? என்பதை எப்போது வேண்டுமானாலும் கட்சி தலைமை அறிவிக்கலாம். அது யாராக இருந்தாலும், தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

உள்ளாட்சி தேர்தலில் பஜாக வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும், குழப்பமும், சிக்கலும் இல்லை. எதிர்காலம் பற்றி இப்போது சொல்ல முடியாது.

என அவர் கூறினார்.

English Summary

Pragya Tagore's claim that Godse is patriotic is not Party's view - Vanathi srinivasan

Latest Articles

KOLNews