KOLNews

கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..! - மெச்சும் ஆர்.எஸ்.எஸ்

தமிழகத்தில் தி.க. அமைப்பு திமுகவை பாராட்டுவது எவ்வளவு சகஜமா, அதைப்போன்று தான் தேசியஅளவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு பாஜகவையும், பிரதமரையும் பாராட்டுவது.  இருப்பினும், அது போன்ற பாராட்டுதல்கள் பாஜக தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

MeToo: RSS leader Dattatreya Hosabale tweets in support of women ...

அந்த வகையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் , "மார்ச் மாத துவக்கத்தில்  மத்திய அரசு விமான நிலையங்களில்  தெர்மல் ஸ்கிரீன் மூலம் பரிசோதனைகளை நடத்தியது. அன்ஹா சமயத்திலேயே, கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்படத் தொடங்கின. 

பிரதமர் மோடி கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள சரியான நேரத்தில்,  சரியான நடவடிக்கையை எடுத்தார். பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக தொடர்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். கடந்த சில  ஆண்டுகளாகவே இதனை அவர் கடைபிடித்து வருகிறார்" என தெரிவித்துள்ளார்..  

அத்துடன், 'கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார். கொரோனா பாதிப்பின்போது, பல்வேறு மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தினார். இத்தாலி,  அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்பு மிகக்குறைவாக உள்ளது” என்றும் தத்தாத்ரேயா ஹோசபல் தெரிவித்துள்ளார்.

இங்கு கூட்டாட்சி தத்துவத்தை மோடி கடைபிடிக்கவில்லை என திராவிட கட்சிகள் கூறி கொண்டிருக்கையில், மறுபுறம் அதே கூட்டாட்சி தத்துவத்தை சிறப்பாக கையாள்வதாக பாராட்டையும் பெறுகிறார் பிரதமர் மோடி.

English Summary

Prime Minister Modi handles federal philosophy in Best way - RSS Praising

Latest Articles

KOLNews