KOLNews

மரணத்திற்கான காரணத்தை சரியாக பதிவிடுங்கள்.! - ராமதாஸ் வலியுறுத்தல் ..!

தமிழக அரசு, கொரோனா தொற்றால் மரணித்தவர்களுக்கான வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில் சரியான காரணம் பதியப்படுகிறதா என்பதில் கவனமெடுத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மரணத்திற்கான சரியான காரணத்தை பதியாத நிலையில், கொரோனாவால் மரணமடைந்தவர்கள், அதற்கான இழப்பீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், கொரோனாவால் இறந்தவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழிகளில் கூட, மரணத்திற்கான காரணம், நூரையீரல் பாதிப்பு, இதய நோய், மற்றும் நிமோனியா என குறிப்பிடப்படுவது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். 

மேலும், இதனால் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய மாநில அரசுகளின் நிவாரண உதவிகள், அவர்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே இறப்பு சான்றிதழ் வழக்கப்படுவதற்கு முன், பாதிக்கப்பட்டவர் குடும்பங்கள் நிவாரணங்களை பெரும் வகையில், இறப்புக்கான சரியான காரணம் சான்றிதழில் பதியப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

English Summary

Properly post the cause of death.! - Ramadas insistence ..!

Latest Articles

KOLNews