KOLNews

புல்வாமா தாக்குதல் ..! - கேள்விகளை அடுக்கும் ராகுல் காந்தி..!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில்,  சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற  வாகனத்தின் மீது, பயங்கரவாதி ஒருவா் வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்ததில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். நேற்று ,அதன் ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Image result for pulwama attack

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள பதிவில், 

‘புல்வாமாவில் வீரமரணடைந்த 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் தியாகத்தை நினைவுகூா்கிறோம். இந்த பயங்கரவாத தாக்குதலால் யாா் அதிகம் பயனடைந்தாா்கள்? இந்த தாக்குதல் குறித்து நடைபெற்ற விசாரணை அறிக்கையின் நிலை என்ன? இப்படியொரு மோசமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததற்கு பாஜக அரசு யாரை காரணம் கூறுகிறது? இந்த நேரத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்’ ,

என பதிவிட்டுள்ளார்.

English Summary

Pulwama attack ..! - Rahul Gandhi questions!

Latest Articles

KOLNews