KOLNews

சோதனை..! - எதிர்கொள்ள தயார் என்கிறார் எஸ்.பி. வேலுமணி

கடந்த தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் பரப்புரையின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில்,  அப்போதைய அதிமுக அமைச்சர்கள் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் ஒன்று. 

அந்த வகையில், தேர்தலில் வெற்றி பெற்றபின் அதனை நிறைவேற்றும் வகையில், அண்மையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, தற்போது,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர் . இதில், கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 52  இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது . 

இதற்கிடையே, சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள  முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவர்கள் தங்களது கடமையை செய்கிறார்கள் என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தான் தயாராக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

English Summary

Raid ! - Ready to face says S.P. Velumani

Latest Articles

KOLNews