KOLNews

பஸ்சுக்குள் மழை ? - ஊழலா என கமல் கேள்வி..!

கடந்த சில நாட்களாக  தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வெளியில் பயணப்படும் போதும் ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது. குண்டும் குழியுமான சாலைகளில் பள்ளம் ,மேடு புரியாது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது வழக்கமாய்விட்டது. பேருந்துகளில் செல்கையில் , பராமரிப்பு குறைபாடுகளால் சில பேருந்துகளின் உள்ளிலும் மழை நீர் சொட்டுகிறது. அத்துடன் புதிய பேருந்துகளிலும் இந்த குறைபாடுகள் உள்ளதாக மக்கள் புலம்புகிறார்கள்.

இந்நிலையில்  மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்  தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பதிவில், "அரசு புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, பயணிகள் குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? ", என கேள்வி எழுப்பியுள்ளார்.

English Summary

Rain in the bus? - Kamal question as corruption ..!

Latest Articles

KOLNews