அ.தி.மு.க. வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கிய அமைச்சருமான ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்
"வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தலைதூக்க விடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனின் நோக்கம். 2021-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர உழைப்போம்" என்றார் .
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், 'அரசியல் கட்சி தொடங்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவரது கட்சியின் கொள்கை, லட்சியத்தை அறிவித்தால்தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என ரஜினி தெரிவித்து இருப்பது தி.மு.க.வை சுட்டிக்காட்டிதான். தி.மு.க. ஆட்சி செய்த காலங்களில் விவசாயிகளின் உரிமைகளை பறித்துவிட்டு தற்போது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை போல காட்டிக்கொள்ள வருகிற 5-ந் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. போராட்டம் அறிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.தான் என்றும் விவசாயிகளின் நண்பன்' என தெரிவித்தார்.
English Summary
Rajini is pointing to DMK! - Minister Jayakumar