KOLNews

ரஜினிகாந்த மீதான வழக்கு தள்ளுபடி..! - ரஜினி ரசிகர்கள் 'மகிழ்ச்சி'

‘துக்ளக்’ வாரஇதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, 1971-ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டு, அதனை துக்ளக்கில் வெளியிட்ட அப்போதைய துக்ளக் ஆசிரியர், மறைந்த சோ வின் தைரியத்தை பாராட்டி பேசியிருந்தார்.

ஆனால் அந்த பேச்சு, சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு, நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளரான உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

Image result for rajini in thuglak function

அத்துடன், இம்மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்று கோரியும், ரஜினி மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரியும் உமாதி சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல்  நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

நேற்று, அம்மனு மீது விசாரணை முடிந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ரஜினிகாந்த மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதாக  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படும் அதே நேரத்தில், இந்த தீர்ப்பால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English Summary

Rajinikanth case dismissed - Rajini fans 'happiness'

Latest Articles

KOLNews