KOLNews

அரசியலுக்கு வந்த ரஜினிகாந்த்..! - தானா வந்தாரா, தள்ளி விடப்பட்டாரா..?

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே வெளியிட்டதை தொடர்ந்து,  தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

" என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்  அரசியல் மாற்றம் தேவை... கட்டாயம் நிகழும்"  என தெரிவித்தார்.  அத்துடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனன் மூர்த்தியையும், ரசிகர் மன்ற மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் அறிவித்தார். 

Tamil | Arjunamurthy

இதில் தமிழருவி மணியனை பலரும் அறிந்திருந்த நிலையில், தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி பாஜகவின் அறிவுசார் அணியின் மாநில தலைவர் என்பது பலரும் அறிந்திராத விஷயம். ஆனால், அறிவிப்பு செய்யப்பட்ட அரை மணி நேரத்திலேயே இதை ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கியதுடன், ரஜினியை பாஜக பின்னால் இருந்து இயங்குகிறதா ? என சந்தேகத்தையும் கிளப்பின.  

இதனால் கட்சி அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ரஜினி பாஜக சார்பானவர் என சொல்லப்படும் விமர்சனகள் வலுவடைந்துள்ளன.

English Summary

Rajinikanth enters politics ..! - Did he come by himself or was pushed by someone..?

Latest Articles

KOLNews