வெகுநாளாய் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்திருக்கிறது. ஆமாம்..ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
“நான் அரசியலுக்கு வருவது உறுதி” என நடிகர் ரஜினி உறுதிபட நான்கு ஆடுகளுக்கு முன்பே தெரிவித்தும், பல வித காரணங்களால் தள்ளிப்போன இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தனது அரசியல் வருகை குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது தெரிந்ததே..
இந்தநிலையில், “ஜனவரி மாதம் தான் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் நேர்மையான, நியாயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகும்… அதிசயம், அற்புதம் நிகழும்..!” எனவும், அதேசமயம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளன. தமிழகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
English Summary
Rajinikanth to launch party in January - Fans celebrate with the official announcement ..!