KOLNews

ரஜினி வருகை..தேர்தலில் தெரிந்துவிடும்..! - திமுக எம்.பி. கனிமொழி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையை திமுக  மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் கனிமொழி எம்.பியிடம், நடிகராஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த கனிமொழி, "நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையால் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தி.மு.க. வாக்கு வங்கியை சிதைக்க வாய்ப்பில்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று சொல்வது தேர்தலில் தெரிந்துவிடும்"  என்றார்.

English Summary

Rajini's visit will be known in the election ..! - DMK MP Kanimozhi

Latest Articles

KOLNews