KOLNews

நீதித் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் ரஞ்சன் கோகோய்..! - காங்கிரஸ் கருத்து

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், மாநிலங்களவை உறுப்பினராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினராக அவா் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். 

இந்நிலையில்,  இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் ஆனந்த் சா்மா, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசுகையில், 

பல சா்ச்சைக்குரிய தீா்ப்புகளை வழங்கிய ரஞ்சன் கோகோய் 4 மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நிலையில், மத்திய அரசு வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, அவருக்கு இந்தப் பதவியை மத்திய அரசு பிரதிபலனாக வழங்கியதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Image result for ranjan gogoi judgements

அரசமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்றம், நீதித் துறை, அரசு நிா்வாகம் ஆகியவற்றுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும். முந்தைய காலகட்டங்களில் கூட நீதிபதியாக பதவி வகித்தவா்கள் 7 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனா். இதுபோன்று ஒருவா் ஓய்வுபெற்று 4 மாதங்களில் நியமிக்கப்படவில்லை.

நீதிபதிகள் ஓய்வு பெட்ரா பின் பிற அரசு அமைப்பின் அல்லது ஆணையத்தின் பதவியை ஏற்பது, நீதித் துறையின் சுதந்திரத்தில் உருவாக்கப்படும் தழும்பாக இருக்கும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இதே ரஞ்சன் கோகோய் பேசினாா். ஆனால், மத்திய அரசுடன் கூட்டு சோ்ந்து அந்த பிழையை தற்போது அவரே செய்துள்ளாா். இதனால்தான் அவரை விமா்சிக்கிறோம். ரஞ்சன் கோகோய், நீதிபதி பதவிக்குரிய கண்ணியத்தை குலைத்ததுடன் நீதித் துறைக்கு களங்களத்தையும் ஏற்படுத்தி விட்டாா். அவரது செயல், தற்போதைய நீதிபதிகளுக்கும் வருங்கால நீதிபதிகளுக்கும் தவறான செய்தியை அளித்துள்ளது

என தெரிவித்தார் ஆனந்த் சா்மா.

English Summary

Ranjan Gogoi has tarnished justice system - Congress opinion

Latest Articles

KOLNews