KOLNews

மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை..! - என்ன செய்ய போகிறார் முதல்வர்..?

இன்று, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் , ஊரடங்கு நீட்டிப்பது , தளர்வுகள் அளிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் பாரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் 

முன்னதாக கூட்டத்தில், அரசு தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் , வருவாய் துறை செயலாளர் , காவல்துறை உயர் அதிகாரிகள் , சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர் . 

இந்தக் கூட்டத்தில் தமிழ்தாட்டில் மேலும் ஒரு வாரம் காரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அத்தோடும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில், 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாட்டுடன் டோக்கனகளை வழங்கி மதுபானம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . கொரோனா ஊரடக்கு தளர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், தோற்று எண்ணிக்கை குறைந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறையாத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டால், விமர்சனம் எழக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

 

English Summary

Recommendation to extend the Lockdown for one more week ..! - What is the Chief Minister going to do ..?

Latest Articles

KOLNews