KOLNews

பொறியாளர்களின் ஊதியத்தை குறைப்பதா..? - கே.எஸ். அழகிரி கேள்வி

அரசு பொறியாளர்களின் ஊதியத்தை தமிழக அரசு குறைப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 

"நெடுஞ்சாலை,பொதுப்பணி, ஊரக வளர்ச்சி போன்ற இருபதுக்கும் அதிகமான துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஊதியம் ரூபாய் 15,000 வரை தமிழக அரசு குறைத்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது . 

2010 திமுக ஆட்சியில் மருத்துவர் களுக்கு இணையாக பொறியாளர்களுக்கு தொடக்க நிலை ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், 2011-ல் அதிமுக அரசு உதவி பொறியாளர்கள் ரூபாய் 15,000 இழப்பு ஏற்படும் வகையில் ஊதிய விகிதத்தை வழங்கியது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.நீதிமன்றத்தில் முறையிட்டார்கள்.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து, இந்த பிரச்சனைக்கு.தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. நீதிபதி முருகேசன் குழு அறிக்கை கொடுத்ததும் 2013-இல் குறைத்து வழங்கப்பட்ட ஊதியத்தை இப்போதும் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

நீதிபதி முருகேசன் குழு அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமலும், குழு அளித்த பரிந்துரைகள் தொடர்பாக பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகளின்  கருத்தை அறியாமலும் ஊதியத்தை குறைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்",  என அவர் தெரிவித்துள்ளார்

English Summary

Reduce the salaries of engineers ..? - K.S. Alagiri question

Latest Articles

KOLNews