KOLNews

விலகும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்..! - உபி தேர்தலில் எதிர்க்கட்சிகள் போடும் கணக்கு பலிக்குமா ?

உத்தரப்பிரதேச மாநிலம் , பாஜக ஆளும் மாநிலம். அதுவும் நாட்டின் தலைமையை எந்த கட்சி ஏற்கும் என தீர்மானிக்கும் மாநிலம் என்பதால், அம்மாநில நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், மத்திய பாஜக அரசுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசின் உதவியுடன் பல்வேறு நலத்திட்டங்கள் அங்கு முன்னெடுக்கப்பட்டாலும், அவையெல்லாம் கூட இம்முறை பாஜகவின் வெற்றிக்கு உதவுமா என்பது சந்தேகமே , என்கிற வகையில் பல அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

NCP To Tie Up With Samajwadi Party In Uttar Pradesh Elections, Says Sharad  Pawarஅதற்கு வலு சேர்ப்பது போல் ஏற்கனவே 4 பா.ஜ.க. எம்.எல்.ஏக்‍கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இந்நிலையில்   மேலும் 13 எம்.எல்.ஏக்‍கள் பா.ஜ.க.விலிருந்து விலகுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாகவும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூட தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 

அம்மாநிலத்தில் முக்கிய அரசியல் சக்திகளுள் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதியும், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை என கூறியிருப்பதும் , சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mid-rung netas at work on joint rallies for Mayawati, Akhilesh Yadav - The  Economic Timesஅத்துடன் அம்மாநிலத்தில் சாதி ,மத வாரியான வாக்குகளும் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானதாக இருக்குமென்பதால், அந்த வகையான கூட்டல் கழித்தல் கணக்குகளை போட்டு, இம்முறை பாஜக தோல்வியை சந்திக்கும் என்றும், அது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தழுவப்போகும் தோல்விக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றும் பாஜக எதிர்ப்பாளர்களால் சொல்லப்படுகிறது. 

மறுபக்கம் அம்மாநில பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத் தான் கொண்டுவந்துள்ள வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து செய்யும் பிரச்சாரத்தையும் குறைத்து எடைபோட முடியாது. 

Rahul, Priyanka slam BJP govt in UP over poll violence - DTNext.in

குறிப்பாக ராகுல்,  பிரியங்கா என காங்கிரசில் உள்ள வெகுஜனத்திரளை ஈர்க்கும் தலைவர்கள் அனைவரும் உபி யில் களமிறங்குகிறார்கள். அதுவே  அங்கு யோகிஆதித்யநாத்தின் பலம் குறைவானது அல்ல என்பதால் தான் காட்டுகிறது என்பதையும் இங்கு பார்க்க வேண்டியுள்ளது.  

5 வருட பதிவி சுகத்தை அனுபவித்துவிட்டு கடைசியாக ஓரிரு மதத்திற்கு முன் கட்சி மாறி வருபவர்களுக்கு சமாஜவாதி கட்சி எந்த அளவிற்கு தொகுதியை ஒதுக்க முடியும் ? அதனால் ஏற்படும் உட்கட்சி குழப்பங்கள் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் ?  என பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

இவற்றையெல்லாம் மறந்துவிட்டு பாஜக எம்.எல்.ஏ க்கள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகுவதே, அதன் தோல்விக்கான அறிகுறியாக பார்த்து எதிர்க்கட்சிகள் மனக்கோட்டை கட்டுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். 

English Summary

Resigning BJP MLAs ..! - Will the Opposition's calculation in the UP elections pay off?

Latest Articles

KOLNews