KOLNews

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000..! - கோரனா நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர்..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

முன்னதாக,இன்று மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும், மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்ட து. இந்த ஊரடங்கு உத்தரவானது இம்மாதம் 31-ம்தேதி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for edappadi palanisamy images

இதனால், அன்றாடம் வேலைக்கு செல்லும் தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், மற்றும் பிற அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியோர்கள் என பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த நடைபாதை வியாபாரிகள், ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர்,பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். அத்துடன், எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறிய குடும்ப அட்டைதாரர்கள், ஏப்ரல் மாதத்தில் அதனை சேர்த்து வாங்கிக்கொள்ளலாம். 

மேலும், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1000 மற்றும் 15 கிலோ அரசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். 

இவை தவிர, வசதியற்றோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே, உணவு தயாரித்து வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலே உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000த்துடன் கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகையும், ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இந்த மாதத்தில் 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும் என்றும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

English Summary

Rs. 1000 for all ration card holders ..! - Corona relief announced by CM ..

Latest Articles

KOLNews