KOLNews

ரூ 4000 கோடி ஒப்பந்தம்..சம்பந்தி தரப்பில் ! - முதல்வரை நேரிடையாக குற்றம்சாட்டும் ஸ்டாலின்

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதிமுகவின் மீது, குறிப்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பகிரங்கமாய் முன் வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 

முன்னதாக, அமைச்சர்  சி வி சண்முகம் பதவி விலக வலியுறுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையின் இடையே 

3 முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது ..

Ration cardholders to receive free rice in Edappadi, says CM Palaniswami -  DTNext.in

.1. அதிமுக ஆட்சியில் ஊழல் துர்நாற்றம் எங்கும் வீசிக்கொண்டிருக்கிறது, முதலமைச்சர் திரு பழனிச்சாமி தனது சம்பாதிக்கும் சம்பந்தியின் உறவினருக்கும் ரூ.4000 கோடிக்கும் அதிகமான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை ஒப்பந்தங்களை கொடுத்துள்ளார்.

Kollywood Politician S P Velumani Biography, News, Photos, Videos | NETTV4U

 2. உள்ளாட்சித் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரது சகோதரருக்கும்,  சகோதரரின் உறவினர்களுக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் மேலான உள்ளாட்சித் துறையின் ஒப்பந்தங்களை கொடுத்து வருகிறார். 

Live Chennai: CM Sacks CV Shanmugam From Cabinet ,CV Shanmugam - Minister CV  Shanmugam - Sack CV Shanmugam - CM Jayalalithaa

3. கனிமவள துறை அமைச்சருமான திரு சி வி சண்முகம் தனது ஊழல் போக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகனுக்கு கல் குவாரி உரிமம் கொடுத்துள்ளார். ஊழியர்கள் தங்களுக்கு அல்லது தங்களுடைய உறவினர்களுக்கோ அரசுப் பணிகளை  எடுக்கக்கூடாது அரசின் காண்ட்ராக்டுகள் மற்றும் குத்தகைகளை பெறக்கூடாது என்பது எல்லோரும் அறிந்த நிலையில்,  அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு கல்குவாரி கொடுத்திருப்பதால் அமைச்சர் சிவி சண்முகம் ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியவராகிறார். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு சக்கரபாணி தனது மகனுக்கு அரசுகள் குவாரியை குத்தகைக்குப் பெற்று இருப்பதால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் உள்ளாக்கப்பட வேண்டியவராகிறார்.

இவ்வாறு குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் அடுக்கி உள்ள நிலையில், இதை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

English Summary

Rs 4000 crore deal..for the relevant parties! - Stalin directly accuses the CM

Latest Articles

KOLNews