KOLNews

ஜனவரி 27ல் சசிகலா விடுதலையாக வாய்ப்பு..?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவருமான வி கே சசிகலா, வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1994- 95 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கு தொடர்பாக  சசிகலாவுக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.  இதை எதிர்த்து வருமான வரித்துறை ஆணையர் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி டிவி செல்வி டிவி தமிழ் செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்றுவிசாரணைக்கு வந்தது அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாகவும், ஆகவே, அவர் வெளியே வந்ததும் சில விளக்கங்களைப் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

அதனை  ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

English Summary

Sasikala likely to be released on January 27?

Latest Articles

KOLNews