KOLNews

விடுதலை ஆனார் சசிகலா .!

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்த சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைய இருந்தது. ஆனால் ஏற்கனவே அவர் சிறையில் இருந்த நாட்களை கணக்கிட்டு, சசிகலா ஜனவரி 27-ந் தேதி (அதாவது நேற்று) விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இதற்கிடையே சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் ஆக்சிஜனை சுயமாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறை தண்டனையின் கடைசி நாளான நேற்று, அவரை விடுதலை செய்ய பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சென்ற அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்த விடுதலை ஆவணங்களில் சசிகலாவிடம் கையெழுத்து பெற்றனர். அதன் பின், நேற்று காலை 11 மணிக்கு சசிகலா சிறை கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். .

அப்பொது  மருத்துவமனைக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., இளவரசியின் மகன் விவேக் மற்றும் குடும்பத்தினர், வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆகியோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

English Summary

Sasikala was released!

Latest Articles

KOLNews