KOLNews

சாத்தான்குளம் விவகாரம் : விசாரணையை சி.பி.ஐ.ஏற்றது

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் (தந்தை – மகன்) மரணமடைந்த விவகாரத்தில்,  மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசாரை கைது செய்தனர். 

சிபிசிஐடி போலீசாரின் விரைவான நடவடிக்கைக்கு நீதிபதிகள் வெகுவாக பாராட்டு தெரிவித்தார்கள்.

முன்னதாக, இந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு விடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அந்த வகையில், இப்போது இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மூலம் விசாரிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரிக்க முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது என்று செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary

Sathankulam issue: CBI acquits probe

Latest Articles

KOLNews