KOLNews

மூத்த அரசியல் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி ( 87 ) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் .

இவர், கடந்த 1984 முதல் 1990 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் , சட்டப்பேரவை உறுப்பினர் . 1981 முதல் 1984 வரை பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . கடந்த 2011 பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கினார் . அப்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெசந்தித்து  தனது ஆதரவைத் தெரிவித்தார் . பின் சில மாதங்களிலேயே கட்சி லைத்துவிட்டு இதையடுத்து சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தன்னை இணைத்துக்கொண்டு, அதில் மாநில தலைவரானார்.  இந்நிலையில் திண்டிவனம் ராமமூர்த்தியின்  மறைவு செய்தி கேட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் . 

English Summary

Senior political leader Dindivanam Ramamurthy passes away

Latest Articles

KOLNews