KOLNews

சிவசேனா பல முறை எங்களை அவமானப்படுத்தியது..! - பட்னவிஸ் புலம்பல்

மஹாராஷ்டிராவில் நடப்பில் உள்ள சட்டசபை பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுவதையடுத்து, கவர்னர் பகத் சிங் கோஷாரியை, முதல்வர் பட்னவிஸ் சந்தித்தார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினமா செய்து கடிதம் வழங்கினார். இதனை கவர்னர் ஏற்று கொண்டார்.

அதன் பின் பட்னவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : 

மஹாராஷ்டிரா மாநில மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, பாஜ., தலைவர் அமித்ஷா, நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சென்ற  5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பாஜக அளித்தது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினோம். ஆட்சி அமைக்க விதித்த கெடு முடிவடைந்துவிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் துவக்கப்பட்டன.

பா.ஜ., சிவசேனா கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பிரச்னையை தீர்க்க இன்னும் கதவுகள் திறந்தே உள்ளன. உத்தவ்வை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சந்தித்தது.

Image result for uddhav thackeray

சிவசேனாவுடன் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசனை நடத்தவில்லை. அதே போல ஆட்சியில் சமபங்கு வழங்குவது குறித்தும் பேசப்படவில்லை. பிரச்னையை தீர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலங்களில், எங்களை சிவசேனா பல முறை அவமானப்படுத்தியது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நான் பேசியது இல்லை. அக்கட்சியின் நடவடிக்கைகள் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அக்கட்சியின் நடவடிக்கைகள் மூலம் எப்படி ஆட்சி அமைக்க முடியும். 

என அவர் கூறினார்.

English Summary

Shiv Sena, insulted us many times ..! - Patnavis laments

Latest Articles

KOLNews