KOLNews

சிறு விவசாயிகளை இடைத்தரகர் எனக்கூறி கொச்சைப்படுத்துவதா ? - பாஜகவை சாடும் கே எஸ் அழகிரி..!

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் என்ற மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில் தெரிவித்ததாவது -  

"கடந்த 1960 இல் உணவு பஞ்சம் ஏற்பட்டபோது, இந்திரா காந்தியின் பசுமை புரட்சி தீர்வு கண்டது. விவசாயம் மற்றும் பாலில் தன்னிறைவு பெற்றுள்ளோம். இதற்கு காங்கிரஸ் காரணம். புதிய சட்டத்தைக் கொண்டுவந்து அதனால் விவசாயிகள் லாபம் அடைவார்கள் என சொல்கிறார்கள்,  எப்படி லாபம் அடைய முடியும் ?விவசாயிகளுடன் காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு, இந்த பயிரை சாகுபடி செய்யுங்கள் என கட்டளையிடும்.  

பொதுவாக விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்வார்கள். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றால் கூடுதலாக விலை கொடுக்கும் வியாபாரிகளிடம் பொருட்களை அவர்கள் விற்பனை செய்வார்கள். அதுதான் விவசாய சுதந்திரம். இதனை, சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் என பாஜக கொச்சைப்படுத்துகிறது. இனி ஒப்பந்தம் விவசாயம் தான் செய்ய வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பல மாநில அரசுகள் எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆதரிப்பது என்பது மிகப்பெரிய கொடுமை", எனத் தெரிவித்தார் கே எஸ் அழகிரி

English Summary

Slandering small farmers as intermediaries? - KS Alagiri slams BJP ..!

Latest Articles

KOLNews