KOLNews

பாதியில் நின்று போன கட்டுமானங்களுக்கு கடன் வழங்க சிறப்பு நிதி ! - நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: துவண்டு கிடக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு 'ஆக்சிஜன்' கொடுக்கும் வகையில்   மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆதாவது , பாதியில் நின்று போன கட்டுமானங்களுக்கு கடன் வழங்க சிறப்பு நிதி உருவாக்கப்படும் எனவும், இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Image result for nirmala sitharaman

முன்னதாக நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், 

"தோராயமாக மதிப்பிட்டதில், 1, 600 திட்டங்களில் , கட்டப்பட்டு வந்த 4.58 லட்சம் வீடுகள் பாதியில் முடங்கியுள்ளன. அப்படி முடிக்கப்படாமல் பாதியில் நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்க சிறப்பு நிதி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசு சார்பில் ரூ.10 ஆயிரம் கோடியும், எஸ்பிஐ மற்றும் எல்ஐசி சார்பில் ரூ.15 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது", என தெரிவித்தார்.

English Summary

Special fund to pay for half-built structures - Nirmala Sitharaman

Latest Articles

KOLNews