KOLNews

சோனியா குடும்பத்திற்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பு வாபஸ்..!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மற்றும் அவர் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக சோனியா காந்தியின் குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் மூலமாக பாதுகாப்பு  வழங்கப்பட்டு வருகிறது. பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதும்  இதே  எஸ்.பி.ஜி பிரிவே.

சோனியாவின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி படுகொலைக்கு பின், அவர்கள் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி இந்த சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது மத்திய அரசு, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை  திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக இது பற்றிய தகவல்கள் மத்திய அரசு வட்டாரங்களில் வெள்ளியன்று மாலை விரைவாகப் பரவிய நிலையில், அதற்கு பதிலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அவர்களுக்கு அரசு சார்பில்  வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர்கள் உயிருக்கு எந்த விதமான அச்சுறுத்தலும்  இல்லை என்று மத்திய உளவுப் பிரிவு  உணர்வதாக சொல்லப்படுகிறது.

English Summary

SPG security for Sonia's family withdrawn

Latest Articles

KOLNews