KOLNews

இளம்பெண் குறித்து அவதூறு பரப்புவதா..? - பிரியங்கா காந்தி ஆவேச பதிவு..!

உத்திர பிரதேச மாநிலம்,ஹத்ராஸ் சம்பவத்தில், பலியான பட்டியல் இன இளம்பெண் மீது அவதூறு பரப்புவது பிற்போக்குத்தனமானது என காங்கிராஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

முன்னதாக  ஹத்ராசில், 19 வயது தலித் பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்  மரணமடைந்த நிகழ்வு தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அந்தப் பெண்ணின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து காங்கிராஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள டுவிட்டரி பதிவில், : ஒரு பெண்ணின் குணாதிசயத்தை  இழிவுபடுத்துவதும், அதற்காக ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதும், குற்றத்துக்கு அவளையே காரணமாக்குவதும் பிற்போக்குத்தனமானது. ஹத்ராஸ் சம்பவத்தில் கொடூர வன்முறை நிகழ்ந்துள்ளது. குடும்பத்தினரின் அனுமதியின்றி இளம்பெண் எரிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணுக்கு தேவை நீதிதான்; அவதூறு அல்ல', என தெரிவித்துள்ளார்.

English Summary

Spreading slander about a teenager ..? - Priyanka Gandhi's furious post ..!

Latest Articles

KOLNews