நேற்று, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் தனது தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் தெரிவித்ததால் சாராம்சம் -
நான் பதவியேற்று மூன்று ஆண்டுகள் 11 மாதங்கள் ஆகின்றது. இந்தக் காலகட்டத்தில் துறைகள் வாரியாக பல விருதுகளை பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லையென்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார், அம்மாவின் அரசு. உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கும் விருதுகளைப் பெற்றுள்ளோம்.
அத்துடன், இந்தப் பகுதியில் சியட் டயர் கம்பெனி நாங்கள் உருவாக்கியதன் வாயிலாக லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றது. சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஏறத்தாழ 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்க 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலா 5 லட்சம் நபர்களுக்கு என மொத்தம் 10 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று சொல்கிறார். எந்த இடத்திற்கும் வாருங்கள். யாராவது எழுதிக் கொடுத்ததை படிக்கக்கூடாது. எந்தத் துறையில் என்னென்ன என்று சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன். நாட்டைப் பற்றியே தெரியாத ஒரு தலைவர் தி.மு.க. தலைவர். அப்படியானால் எவ்வளவு எரிச்சலுடன் அவர் உள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கோரப் பசியில் இருக்கிறார். சிறிது ஏமாந்தாலும் மக்களையே சாப்பிட்டுவிடுவார். எப்போதும் முதல்-அமைச்சர் என்று ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார்.
English Summary
Stalin is hungry ..! - Edappadi Palanisamy Review