KOLNews

பொறுப்பற்ற வாக்குறுதியாலேயே மாணவன் இறப்பு ..! - திமுகவை குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி .!

இரு முறை நீட் தேர்வு எழுதி, மூன்றாம் முறைக்கு தயாராகி வந்த தனுஷ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழக மக்களை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர் தனுஷின்  மரணத்திற்கு காரணம் பொறுப்பற்றமுறையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி தான் என்பதாக திமுகவை சாடியுள்ளார் முன்னாள் முதல்வரும் , தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுகவினர், கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது நீட் தேர்வு  ரத்து செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நன்றாக தெரிந்தும், போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், கடந்த ஜூன் மாத்தி,சட்டப்பேரவையில் நீட் தொடர்பான தனது கேள்விக்கு மழுப்பலான பதிலையே  முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார், என்றும், பொறுப்பான தலைவர், சொல்லும் கருத்தின் சாதக பாதகங்கள் உணர்ந்து சொல்லவேண்டும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்கள் இதனை அரசியலாக்க விரும்பவில்லை என கூறியிருப்பதுடன், இறந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

English Summary

Student dies due to irresponsible promise ..! - Edappadi Palanisamy accuses DMK!

Latest Articles

KOLNews