KOLNews

உயர்ந்த உள்ளம் ..! - தன் வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு தர காத்திருப்பதாக கமல் அறிவிப்பு..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்,  கரோனா வைரஸ் குறித்த சிகிச்சைக்கு  தன்  மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைப்பதாக தெரிவித்துள்ளார். 

உலக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் 539  பேரை தொற்றியுள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அதில் 11  பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய மற்றும் மாநில அரசுசுகளும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  தமிழகத்தில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் ஒருவர் செவ்வாய் இரவு மரணமடைந்துள்ளார்.

மேலும் தலைநகர் டெல்லி போன்ற இடங்களில் கரோனா வைரஸ் தொற்று பீதியில், மக்களை இதிலிருந்து விடுபட சேவை செய்யும் மருத்துவர்களை கூட வீட்டை காலி செய்ய சொல்லும் அவலம், வீடு உரிமையாளர்களால் நிகழ்த்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் இந்த நெருக்கடி நேரத்தில் என் வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன் என்று மநீம தலைவர் கமல் தெரிவத்துள்ளார்.  

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், 

இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்.

என தெரிவித்துள்ளார் கமல். 

English Summary

Superior Heart ..! Kamal ready to give his house to use as Hospital

Latest Articles

KOLNews