KOLNews

ஸ்வீட் எடு..கொண்டாடாதே..! - அயோத்தி தீர்ப்பு குறித்த நிபந்தனை ..!

இன்னும் ஒரு சில நாட்களில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் உ.பி., உயரதிகாரிகளை அழைத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்றுஆலோசனை நடத்தினார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது என்பது பற்றிய  தீர்ப்பு  நவ., 13 முதல் நவ.,15 க்குள் தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது . இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் படியும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு  உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Image result for Ranjan gogoi

இந்நிலையில் உ.பி., மாநில தலைமை செயலாளர், டிஜிபி, மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார். அயோத்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட-ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும் நாளில் இனிப்புக்கள் வழங்கலாம். ஆனால் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என போலீசார் ஏற்கனவே உத்தரவிடபட்டுள்ளது.

English Summary

Sweet take..but don't celebrate ..! - Condition on Ayodhya verdict ..!

Latest Articles

KOLNews