KOLNews

அனுதாபம் சரி..ஆனால் அணுகுமுறை தவறு..! - ராகுலின் நீக்கப்பட்ட ட்விட்டர் பதிவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெலலியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட  நிலையில், தற்போது அப்பதிவை அந்நிறுவனம் நீக்கியுள்ளது . 

கடந்த வாரம், டெல்லியின் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் ,  9 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் .அத்துடன், சிறுமியின் உடல் அவசர அவசரமாக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எரிக்கப்பட்டது . 

இந்நிலையில், இச்சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து நாடாகுமுன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன . இருந்தபோதும் இது குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை. இதனிடையே , சிறுமியின் பெற்றோரை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி , சிறுமியின் பெற்றோருடன் தான் இருக்கும் புகைப்படத்தை டவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தலித சிறுமியும் நாட்டின் மகள்தான் என்று குறிப்பிட்டிருந்தார.

இந்நிலையில், ராகுலின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் , ராகுல் காந்தியின் இதன் மூலம் , போக்சோ சட்டத்தை மீறியுள்ளார் என்றும் , பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை அவர் தெரியப்படுத்திவிட்டார் என்றும் கூறி, ராகுலின அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது . 

இந்நிலையில் ராகுல் காந்தியின் அந்த பதிவை டவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது . 

English Summary

Sympathy is right..but attitude is wrong ..! - Rahul's deleted Twitter post

Latest Articles

KOLNews