KOLNews

தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது..! - முதல்வர் பெருமிதம் ..!

'தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது, ஆனால் அமைதியை குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர்' என தமிழக  முதல்வர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது - 

எதிர்க்கட்சியினர், குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி குறித்து சிறுபான்மையினர் அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிடுகின்றனர். இது குறித்து ஏற்கனவே சட்டசபையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் பிரச்னை இல்லை. தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆனால், முறைகேடு நடந்ததாக, ஸ்டாலினும், திமுகவும் வேண்டுமென்றே குறை சொல்கின்றனர் .

தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்கிறது. அமைதியை குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.சிறப்பான நிர்வாகத்தால் தமிழகம் மத்திய அரசின் விருதை பெறுகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இடையூறு செய்கிறார். 

எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள். நீதிபதிகள். அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது.  என அவர் கூறினார்.

English Summary

Tamil Nadu is a peaceful park ..! - The CM is proud ..!

Latest Articles

KOLNews