KOLNews

தமிழகம், திறந்தவெளி சாக்கடையாக உள்ளது..! - சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கமல்

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,நேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 அம்ச வாக்குறுதிகளை வெளியிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய கமல்,  "ஏரி, கண்மாய்கள் எல்லாம் நமது சொத்துகள். அவற்றை மாசுப்படுத்துபவர்களை தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், பாதாள சாக்கடை இல்லாமல் திறந்தவெளி சாக்கடையாக தான் உள்ளது. தவிர, குப்பைகள், நெகிழி தான் அதிகமாக உள்ளது. இதனை நாங்கள் ஆட்சிக்கு வந்தப்பின் போக்குவதற்கான திட்டங்கள் உள்ளன. லோக்சபா சட்டத்தின் பற்களை பிடுங்கியுள்ளனர். அதன் பற்களை கட்டினால், அதிகாரிகள் தவறு செய்யமாட்டார்கள். சுற்றுச்சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மையம் என்றால் மிகையல்ல. சுற்றுச்சூழல் சரித்திரம் மாறினால் மனித சரித்திரம் மாறும்"என தெரிவித்தார் .

அத்துடன், பொங்கல் பரிசு குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தால் அரசுக்கு செலவு, மக்களுக்கு லாபம். இது மட்டுமே நிகழுமே தவிர இது அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என தெரிவித்தார். 

English Summary

Tamil Nadu is an open sewer ..! - Kamal on environmental protection

Latest Articles

KOLNews