KOLNews

முதலீடுகளை ஈர்க்கவே வரி குறைப்பு .! - நிர்மலா சீதாராமன்

நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது, 'முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், ' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த செப்டம்பரில், அவசர சட்டம் மூலம், நிறுவனங்களுக்கான வரி விகிதம், 30லிருந்து, 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் தயாரிப்பு துறையில் புதிய நிறுவனங்களுக்கு, வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக, வரிச் சட்டங்கள் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

Image result for tax cuts

அப்போது நடந்த விவாதத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், : வளரும் நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் பலவும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க, வரி விகிதத்தை குறைத்துள்ளன. அதை பின்பற்றி, முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டது.

குறிப்பாக, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அன்னிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம் என கருதியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் , சாப்ட்வேர் உருவாக்கம், பளிங்கு கற்களை 'ஸ்லாப்' ஆக மாற்றுவது, 'கேஸ்' சிலிண்டர் நிரப்புதல், புத்தக அச்சடிப்பு, திரைப்படம் ஆகியவை, புதிய தயாரிப்புகளாக கருதி வரிச்சலுகை பெற முடியாது. 

என அவர் கூறினார்.

English Summary

Tax cut to attract investments. - Nirmala Sitharaman

Latest Articles

KOLNews