KOLNews

அட..சொல்லிட்டு போங்கய்யா..! - மநீமவிலிருந்து விலகியவர்களை குறித்து சனம் ஷெட்டி

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவிய நிலையில், அதிலிருந்து தொடச்சியாக துணைத் தலைவர் மகேந்திரன்,பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு, மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் வெளியேறினர்.

இந்நிலையில், பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, ரசிகர்களிடம் பிரபலமான  சனம் ஷெட்டி, 

Kamal Hassan is leading in Coimbatore South | Coimbatore News - Times of  India

இது குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். 

அதில், " கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும் போது எதற்காக மக்கள் நீதி மையத்தில் சேர்ந்தீர்கள் என லட்சம் பேரிடம் பேசினீர்கள், ஆனால் தற்போது விலகும்போது தனிப்பட்ட காரணம் எனக் குறிப்பிட்டு இருப்பது ஏன்?".  என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், கமல்ஹாசன் அதிகாரத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், அவருடைய தொலைநோக்குப் பார்வை ஒன்றே போதும் என்றும் பாராட்டியுள்ளார் சனம் ஷெட்டி.

English Summary

Tell the reason before left.! - Sanam Shetty on those who left MNM

Latest Articles

KOLNews