KOLNews

உண்மையை சொல்லுங்கள்..! தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து பேசியது என்ன..? - தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல், கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது - அப்படி என்றால் உண்மை என்ன?, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்' என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா? என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

English Summary

Tell the truth ..! What did the Chief Minister meet and talk to the Governor of Tamil Nadu ..? - Dhinakaran

Latest Articles

KOLNews