KOLNews

இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்..! - ராகுல் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு, பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் 

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு  3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று (நவ.,08) காங்., இளைஞரணியை சேர்ந்த சிலர் டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

அப்போது, அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக  போலீசாரால்  கைது செய்யப்பட்டனர்.

Image result for People in queue during demonetisation

இதற்கிடையே, பணமதிப்பிழப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல், பணமதிப்பிழப்பு என்ற பெயரில் இந்திய பொருளாதாரத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் 3 ம் ஆண்டு. பல உயிர்களை பறித்த இந்த தாக்குதல் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளை காணாமல் போக செய்தது. லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர்.

மேலும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் நீதியின் முன் கொண்டு வரப்படவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் பணமதிப்பிழப்பு தொடர்பான சில படங்களையும் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் பாதிப்பை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுளார்.

 

 

 

 

English Summary

Terror attack on Indian economy ..! - Review of Rahul

Latest Articles

KOLNews