KOLNews

சோதனை..! - எஸ்.பி. வேலுமணிக்கா ..திமுகவுக்கா..?

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமானது என சொல்லப்படும்  52 இடங்களில் இன்று காலையிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசியலில் இன்று காலை முதலே பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு போகப்போக வேறு திசையை நோக்கிச் சென்றது. அதாவது திமுகவினரே எதிர்பார்க்காத வகையில் எஸ் பி வேலுமணியை  ஆதரித்து அதிமுக தொண்டர் கூட்டம் வேலுமணி இல்லத்தைச் சூழ்ந்து, அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை இட்டது.

 அங்கு அவர்களுக்கு பொங்கல்,வடை, இட்லி, ரோஸ்மில்க் என்று உணவுகள் பரிமாற பரிமாறப்பட்டது பேசும் பொருளானது . அரசியல் விமர்சகர்களால், கொரோனா காலத்தில் இப்படி மக்களை கூட்டுவது சரியா என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மீது இதுபோன்ற நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டால்  அதிமுக அதற்கான எதிர்வினையை இப்படி ஆற்றும் என்று திமுகவுக்கு அழுத்தமாகச் சொல்லும் வகையில் இப்படிப்பட்ட ஏற்பாடுகளை அதிமுக மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது..

இந்த சோதனைக்கு இடையே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் விசாரிக்கப்பட்டு உள்ளார் தொடர் சோதனை மேற்கொண்டும், கணக்கில் வராத பணம் என்று ரூபாய் 13 லட்சத்து சொச்சத்தை  மட்டுமே   கைப்பற்ற  முடிந்ததாக தகவல் வந்துள்ளது  ஒரு முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து  கைப்பற்றப்பட்டது வெறும் 13 லட்சம் மட்டுமே என்பதால் பெரிதாக ஏதோ எதிர்பார்த்து இருந்த திமுக ஆதரவாளர்களுக்கு சற்று ஏமாற்றமே..

கொங்கு மண்டலத்தில் 10 எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்ததாக சொல்லப்படும் எஸ் பி வேலுமணி, அதிமுகவின் அவசியமான ஆளுமைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் எஸ் பி வேலுமணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு,  அவரை  குற்றவாளியாக மக்கள் முன் அடையாளம் காட்டினால் மட்டுமே திமுக தப்பிக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் திமுக மாட்டிக்கொண்டு கொண்டுவிட்டது..

 ஒருவேளை இதிலிருந்து எஸ் பி வேலுமணி விடுபட்டால், அது அவருக்கு அரசியல் ரீதியான பலனை தரும் விஷயமாக மாறிவிடும்.  இருப்பினும் அது போன்ற ஒரு சூழ்நிலையில் வர விடாமல் இருக்க திமுக சட்டபூர்வமான வழிகளில் அதிக தீவிரம் காட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

 

 

 

 

English Summary

Test ..! - For S.P. Velumani or DMK ..?

Latest Articles

KOLNews