KOLNews

ரகுராம்ராஜன் கொடுத்த கடன் தான் காரணம் .! - பழி சுமத்தும் நிதி அமைச்சர்..!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் தளர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோது கொடுக்கப்பட்ட மோசமான கடன்கள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “இந்திய பொருளாதாரம்: சவால்கள்” மற்றும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் 2011-2012ம் ஆண்டில் 9,190 கோடியாக இருந்தது. அந்த கடன் தொகை 2013-2014 காலகட்டத்தில் 2.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. பாஜக தலைமையிலான ஆட்சி மே 2014ல் தான் ஆட்சிக்கு வந்தது என்றார்.

Image result for manmohan singh

அதோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இருவரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்கள். 2016 நவம்பரில் ஒரே இரவில் பணமதிப்பிழப்பு உட்பட, பணம் சார்ந்த முறைசாரா பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்ததாக அவர்கள் கூறுகின்றனர்

Image result for raghuramrajan and manmohan singh

ரகுராம் ராஜனை ஒரு சிறந்த அறிஞர் என்ற வகையில், அவரை நான் மதிக்கிறேன். அவர் இந்திய பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் தலைவராக பொறுப்பை ஏற்றார். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சமயத்தில் தான், அவரது நட்பு தலைவர்களின் தொலைபேசி அழைப்பின் பேரில் கடன்களை வழங்கியுள்ளார். இந்திய பொதுத்துறை வங்கிகள் இதிலிருந்து மீள்வதற்கு, அரசின் மூலதன உதவியை ஏதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.

இந்திய பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலம் என்பது மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலும் ரகுராம் ராஜன் ரிசர்வங்கி ஆளுநர் பதவியிலும் இருந்த காலம் தான், ஆனால் அதைப்பற்றி நாம் அப்போது அறிந்திருக்கவில்லை

என கூறினார் நிர்மலா சீதாராமன் 

English Summary

The loan given by Raghuramrajan is the reason - Minister of Finance to blame ..!

Latest Articles

KOLNews